4 வயது சிறுமியை வீதியில் கைவிட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைது!
நேற்று காலை 4 வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்று, வத்தேகம – யட்டிராவண, முதுனே கம்மெத்த வீதியில் விட்டுச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் மற்றும் சந்தேகநபரான பெண் ஆகியோர் இன்று (14) காலை ஹாலிஎல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், குறித்த சிறுமியின் தாயார் எனவும், ஆண் சந்தேகநபர் அப்பெண்ணின் காதலன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலதிக விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்ட இருவரையும் வத்தேகம பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

