கச்சா எண்ணெய் விலை உயர்வு!
ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது.
இதன் விளைவாக எரிசக்தி விலைகள் அதிகரித்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பெரலுக்கு 91 டொலருக்கும், அமெரிக்காவில் பெட்ரோலின் விலை ஒரு கெலனுக்கு 4 டொலராகவும் உயர்வடைந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய டிரம்ப், யுரேனியத்தைச் செறிவூட்டும் ஈரானின் முக்கியத் தளங்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள ஒரு பகுதியை அமெரிக்கப் படைகள் விரைவில் குறி வைக்கக்கூடும் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

