அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிஸ் பேச்சு வார்த்தை இரத்து
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் நடைபெறவிருந்த முக்கிய பேச்சுவார்த்தைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக இரண்டு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெறவிருந்தது.
சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் மலைப்பகுதியில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது.
இந்தநிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்று நடைபெறாது என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் பேசுவதற்காக, அமெரிக்கத் துணைத் ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் சுவிட்சர்லாந்துக்குச் சென்று ஈரானியப் பிரதிநிதிகளைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.
எனினும், அவர் தனது பயணத்தைத் திடீரென இரத்து செய்துள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று இரவு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சந்திப்பு நடைபெறாது என்பதைச் சுவிஸ் வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

