‘பிரஜா சக்தி’ திட்டத்தை வலுப்படுத்தக் கனேடிய உயர் ஸ்தானிகர் இணக்கம்
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான முயற்சிகளைப் பாராட்டிய கனேடிய உயர்ஸ்தானிகர், வறுமை ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்குக் கனடாவின் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுவூட்டும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ‘பிரஜா சக்தி’ திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் சமூகப் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான விசேட உத்திகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.
மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களை வலுப்படுத்துவதில் இரு தரப்பும் கவனம் செலுத்தியதுடன், இலங்கையின் பின்தங்கிய கிராமியப் பிரதேசங்களின் உட்கட்டமைப்பு மற்றும் வறிய மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்குப் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்ககனேடிய உயர் ஸ்தானிகர் இணக்கம் தெரிவித்தார்.

