தங்கச் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது​

தங்கச் சங்கிலி பறிப்புடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது​

தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்காகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கட்டான, கெட்டுவெல்லேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரிடமிருந்து 06 கிராம் 210 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மீரிகம, கிதுல்வல இஹல பிரதேத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார். 

மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின்போது, இந்தச் சந்தேக நபர் பூகொட, கிரிந்திவெல, கொஸ்கம, வீரம்புகெதர, நாரம்மல, பொல்கஹவெல, பாதுக்கை, கட்டுநாயக்க மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் தங்கச் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சொத்துக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது. 

மேலும், இக்குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, ஒரு வாள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட தங்கச் சங்கிலிகளுக்குரிய 09 தங்கக் கட்டிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், ஜூன் 16ஆம் திகதி வரை தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

manel