குச்சவெளியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களைக் கடத்திய இருவர் கைது!
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுரங்குடா காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டி கடத்த முயன்ற இருவர் இன்று (11-06-2026) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் நேரடி வழிநடத்தலின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, மதுரங்குடா காட்டுப் பகுதியில் பெறுமதிமிக்க முதிரை மரங்களை வெட்டி, ‘லே மாஸ்டர்’ (Leyland Master) ரக வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்ற போதே இரு சந்தேகநபர்களும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் குச்சவெளி, கும்புறுபிட்டி, மதுரங்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தர்மசிங்கம் நிரஞ்சன்
இக்கினேசியஸ்கோ ஹக்ரன்
சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் அழிக்கும் வகையில் இடம்பெற்று வந்த இந்த மரக்கடத்தலை துரிதமாகச் செயற்பட்டு முறியடித்த குச்சவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினதும், பொலிஸ் குழுவினரினதும் இப்பணியைப் பாராட்டி, அப்பகுதி கிராம மக்கள் தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும், கைப்பற்றப்பட்ட முதிரை மரங்கள் மற்றும் வாகனத்தையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

