PTA-வை ஒழிக்க வலியுறுத்தி சுரேஷ் சலே உண்ணாவிரதம்

உள்நாட்டிலும் உலகெங்கிலும் கடும் விமர்சனங்களை சந்தித்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்பது, அச்சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான இலங்கையர்களைக் கைது செய்து, அவர்களை மாதக்கணக்கில், ‘ஏன் வருடக் கணக்கில்கூட’ சிறையில் அடைத்த முன்னாள் புலனாய்வுத் துறைத் தலைவரின் கோரிக்கையாக மாறியுள்ளது.

ஏழு வருடங்களுக்கு வருடங்களுக்கு முன்னர் நூற்றுக்கணக்கானோரை பலியெடுத்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சூழ்ச்சி குற்றச்சாட்டுகளின் பேரில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நூறு நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் துவான் சுரேஷ் சலே, நேற்று முன்தினம் (ஜூன் 5) முதல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளதான அவரது புதல்வர் கூறுகிறார்.”

அவர் எந்த உணவையும் அருந்தவோ தண்ணீரை பருகவோ மறுத்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காகவே அவர் இதனைச் செய்கின்றார், CID-இற்குள் அவர் கொடூரமாகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையும், ஒரு நாயைப் போல நடத்தப்படுகிறார் என்பதைக் காட்டுவதற்காகவுமே அவர் இதைச் செய்கின்றார்,”

என குஷால் சலே இன்று (ஜூன் 7) ஊடகங்களிடம் தெரிவித்தார்.குற்றப் புலனாய்வு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவரை, தனது தாயார் மனோரி சலேவுடன் சென்று சந்தித்ததன் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுரேஷ் சலேயின் புதல்வர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.  

சுரேஷ் சாலேயின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்குக் கடிதம் எழுதியுள்ள சட்டதரணி அசித் சிறிவர்தன, முன்னாள் புலனாய்வுத் தலைவருக்கு வைத்திய வசதிகளை ஏற்படுத்தித் தந்து அவரை வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், சர்வதேச நீதித்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

நாட்டில் நீதி கிடைக்காத காரணத்தால், இலங்கை குடிமக்களுக்கு எதிரான அரச குற்றங்களுக்கான குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை இலங்கை அரசும் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகளும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.

manel