விளையாட்டு திறனை மேம்படுத்த வில் அம்பு உபகரணங்கள் அன்பளிப்பு!

கோளாவில் விநாயகர் மகா மகாவித்தியாலத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், வில் அம்பு உபகரணங்கள் (05) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் இ.சுவர்ணராஜ் மற்றும் உறுப்பினர் எஸ்.சுஜிகாந்தன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க, வர்த்தகர் குணசேகரம் பிரஜாந் இவ்வன்பளிப்பை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் த.ராசநாதன்,ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் விளையாட்டுத் திறன்களை வளர்க்கவும், வில் வித்தை விளையாட்டில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவும் இந்த அன்பளிப்பு பெரும் பங்களிப்பாக அமையும் என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

