வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்

வரலாற்றில் முதல் முறையாக – தமிழ் மொழிக்கு அங்கீகாரம்

சபரகமுவ மாகாண நூலக கலை இலக்கிய விழாவின் பிரதம விருந்தினராக
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்திருந்தார்.

வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் மொழிக்கு முழு அங்கீகாரம் வழங்கி சபரகமுவ மாகாண நூலக சேவைகள் சபையின் ஏற்பாட்டில் கலை இலக்கிய விழா நேற்றைய தினம் (04/06) சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், மற்றும் எழுத்தாளர்களுக்கு சான்றிதழ்கள் , விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

நிகழ்வில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தின பாராளுமன்ற உறுப்பினர்கள், நூலக சபையின் தலைவர் மற்றும் அரச அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். பிரதி அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது

மாகாணத்தின் அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் சம வாய்பை ஏற்படுதி, வாசிப்பு பழக்கத்தையும் இலக்கிய ஆர்வத்தையும் ஊக்குவிப்பதே இவ்விழாவின் முக்கிய நோக்கமாக அமைந்தது. தமிழ் மொழிக்கு வழங்கப்பட்ட இந்த அங்கீகாரம் சபரகமுவ மாகாணத்தின் கலாசார ஒற்றுமைக்கு ஒரு மைல்கலாக அமைந்துள்ளதாகவும்,

“வாசிப்பின் மூலமே ஒரு சமூகம் முன்னேற முடியும். தமிழ் மொழி பேசும் மக்களின் இலக்கிய திறனை வெளிக்கொணர இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம். எனவும் குறிப்பிட்ட பிரதி அமைச்சர்

அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது” என அவரது உரையிலே மேலும் தெரிவித்தார்.

manel