லெபனானுக்கான மனிதாபிமான உதவியை இரட்டிப்பாக்கியது ஐ .நா
ஈரான், லெபனான், அமெரிக்கா, இஸ்ரேல் போர் நான்காவது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில், லெபனானில் அதிகரித்து வரும் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவைப்படும் நிதியின் அளவை இரட்டிப்பாக்குவதாக ஐக்கிய நாடுகள் சபை வெள்ளிக்கிழமை கூறியது.
1.4 மில்லியன் மக்களைச் சென்றடைவதற்காக, கூடுதலாக 331.5 மில்லியன் டொலர் நிதியைக் கோரி, லெபனான் அரசாங்கத்துடன் இணைந்து ஐ.நா. வெள்ளிக்கிழமை ஒரு புதிய உதவிக் கோரிக்கையைத் தொடங்கவுள்ளது.
இதன் மூலம் மொத்தக் கோரிக்கை 639.9 மில்லியன் டொலராக உயரும். மே 31 நிலவரப்படி, இதுவரை 185.9 மில்லியன் டொலர் நிதி பெறப்பட்டுள்ளது.

