ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை சோதித்த பிரான்ஸ் கடற்படை

ரஷ்யாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை சோதித்த பிரான்ஸ் கடற்படை

சர்வதேசத் தடைகளுக்கு உட்பட்டு ரஷ்யாவிலிருந்து வந்துகொண்டிருந்த ஒரு எண்ணெய் கப்பலில் பிரெஞ்சு கடற்படை ஏறி சோதனை நடத்தியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முர்மானஸ்கிலிருந்து புறப்பட்ட ஒரு எண்ணெய்க் கப்பலை, பிரிட்டானியின் முனையிலிருந்து 400 கடல் மைல்களுக்கும் (740 கி.மீ.) அதிகமான தொலைவில் மேற்கே பிரெஞ்சு கடற்படை தடுத்து நிறுத்தியதாக, அட்லாண்டிக் கடல்சார் மாகாணம் திங்களன்று வெளியிட்ட ஒரு தனி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“போலி கொடியை ஏற்றியதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கப்பலின் தேசியத்தை சரிபார்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருந்தது. ஆய்வுக் குழுவினர் கப்பலில் ஏறிய பிறகு, ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஏற்றப்பட்ட கொடியின் முறைகேடு குறித்த சந்தேகங்கள் உறுதி செய்யப்பட்டன.

சர்வதேச சட்டத்திற்கு இணங்கவும், அரசு வழக்கறிஞரின் வேண்டுகோளின் பேரிலும், கப்பல் திசை திருப்பப்பட்டது,” என்று அது கூறியது. அது அந்தக் கப்பலின் பெயரை குறிப்பிடவில்லை.

இருப்பினும், ரஷ்யாவுடன் தொடர்புடையதும், தடைகளுக்கு உட்பட்டதுமான பல கப்பல்கள்
இருப்பினும், ரஷ்யாவுடன் தொடர்புடையதும், தடைகளுக்கு உட்பட்டதுமான பல கப்பல்கள் தொடர்ந்து இங்கிலாந்து கடல் எல்லையைக் கடந்து செல்வதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் காட்டுகின்றன.

manel