சுவாரெஸ் இல்லாத உலகக்கிண்ண அணி
அமெரிக்கா, மெக்சிகோ , கனடா ஆகியன இணைந்து நடத்தும் உலகக் கிண்ண அணியிலிருந்து உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ் நீக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
143 போட்டிகளில் 69 கோல்கள் அடித்து உருகுவேயின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரரான சுவாரஸ், 2024-ல் சர்வதேச உதைபந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பிறகு, தேசிய அணிக்குத் திரும்புவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
39 வயதான அவர்,ஆர்ஜென்ரீனாவின் நிர்வாக பாணியை விமர்சித்ததற்காக பீல்சாவிடம் மன்னிப்புக் கேட்டதாகக் கூறினார்.
உருகுவேயின் 26 பேர் கொண்ட அணியில் இடம்பெறாத மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர், 30 வயதான நடுக்கள வீரர் நஹிடன் நாண்டெஸ் ஆவார். இவர் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுகளின் போது ‘செலஸ்டே’ அணிக்காகத் தொடர்ந்து விளையாடி வந்தார்.
ரியல் மாட்ரிட் நடுக்கள வீரர் ஃபெடரிகோ வால்வெர்டே, பார்சிலோனா தடுப்பாட்ட வீரர் ரொனால்ட் அரூஜோ, டோட்டன்ஹாம் நடுக்கள வீரர் ரோட்ரிகோ பென்டான்கர், அட்லெடிகோ மாட்ரிட் தடுப்பாட்ட வீரர் ஜோஸ் மரியா கிமினெஸ் , மான்செஸ்டர் யுனைடெட் நடுக்கள வீரர் மானு உகார்டே ஆகியோரை தலைமைப் பயிற்சியாளர் மார்செலோ பீல்சா அணியில் சேர்த்துள்ளார்.
ஜூன் 15 ஆம் திகதி சவூதி அரேபியாவுக்கு எதிராக உருகுவேயின் முதல் போட்டி நடைபெறும்.

