ட்ரம்பின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம்
அமெரிக்காவும் ஈரானும் தங்களது போர் நிறுத்தத்தை நீடிக்கவும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்திற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வட்டாரங்கள் தெரிவித்தன.
இருப்பினும், அமெரிக்கஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை, மேலும் இது இறுதி செய்யப்படவில்லை என்று ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த ஒப்பந்தம் போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீடிக்கும்.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் போன்ற கடினமான பிரச்சினைகளை பேச்சுவார்த்தையாளர்கள் கையாளும் அதே வேளையில், இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை வழியாக போக்குவரத்து தடையின்றி செல்ல இது அனுமதிக்கும்.
வாஷிங்டன் தெஹ்ரான் ஆகிய நகரங்களில் உள்ள தலைமைகளால் இது அங்கீகரிக்கப்பட்டால், பெப்ரவரி 28 ஆம் திகதி மோதல் தொடங்கியதிலிருந்து அமைதியை நோக்கிய மிகப்பெரிய படியாக இது அமையும்.
ஏப்ரல் மாத தொடக்கத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து, இரு நாடுகளுக்கும் இடையே நடந்த பதிலடித் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்த சாத்தியமான ஒப்பந்தம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கவெள்ளை மாளிகை மறுத்துவிட்டது, இந்த முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் குறித்த செய்திக்கு ஈரான் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

