தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது!

தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது!

தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள தவெக ஆட்சி அமைப்பதற்கு திமுக எந்த இடையூறும் செய்யாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மேலும் தனியார் செய்தி நிறுவனத்திற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

உடனடியாக இன்னொரு சட்டமன்ற தேர்தலை திமுக விரும்பவில்லை. 

அரசியலமைப்பு சிக்கலை ஏற்படுத்தவும் திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பவில்லை. 

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான மாதம் 1,000 ரூபா வழங்கும் திட்டத்தை தொடர வேண்டும். 

தவெகவின் வாக்குறுதியான 2,500 ரூபா தருவது தற்போது சாத்தியமற்றது. 

தற்போது, 2,500 ரூபா வழங்குவது சாத்தியமற்றது என்பதால் மாதம் 1000 ரூபா ஐ தடையின்றி வழங்க வகை செய்ய வேண்டும். 

பாடசாலை மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தடையின்றி தொடர வேண்டும். 

திராவிட முன்னேற்றக் கழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை தொடர வேண்டும். 

தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றினால் மகிழ்ச்சிதான்,இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

manel