பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் பேருந்து விபத்து

பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் பேருந்து விபத்து
Screenshot

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை நோக்கி பயணித்த சிட்டி ரைடர் பேருந்து ஒன்று பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ கொட்டியகலை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து சம்பவம் 28.04.2026.செவ்வாய்கிழமை காலை 7.40மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிவந்த சிட்டி ரைடர் பேருந்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பேருந்து வங்கி ஒன்றில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது பேருந்தில் பயணித்த சுமார் 30கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் 

இதேவேளை காயங்களுக்கு உள்ளான மாணவர்கள் சிலர் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன 

இந்நிலையில் பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்கள்.ஹோலிரோசரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் தர்மகீர்த்தி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சாலம் பாடசாலையின் மாணவர்கள் ஆகியோரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

manel