தோனி மீண்டும் களத்தில் இணைவாரா?

தோனி மீண்டும் களத்தில் இணைவாரா?

IPL 2026 தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி விளையாடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

பயிற்சியின்போது அவருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு உபாதை மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

“தோனி மைதானத்திற்குத் திரும்புவதற்காக நாங்கள் ஆரம்பத்திலேயே சிறிது முயற்சி எடுத்தோம். ஆனால், பயிற்சி ஆட்டத்தின் போது அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் குணமடைவதற்காக மிகவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறார். எனினும், இந்த திடீர் பின்னடைவு காரணமாக அவர் போட்டிகளுக்குத் திரும்புவதில் மேலும் தாமதம் ஏற்படும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 8 போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், இந்தத் தகவல் CSK ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

manel