கட்டானையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கட்டானையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

கட்டான, ஜயபிம பகுதியில் 52 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கட்டான பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவராவார். 

கட்டான பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel