கடும் மின்னல் எச்சரிக்கை

கடும் மின்னல் எச்சரிக்கை

தென் மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, மொனராகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று (17) பிற்பகல் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அத்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

manel