அதிவேக வீதிகளில் பனிமூட்டம்; சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு!
தற்போதைய நாட்களில் நிலவும் அதிக பனிமூட்டம் காரணமாக, அதிவேக வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.
வாகனங்களின் முன்பக்கத் தலைப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணிக்கவும்.
வாகனங்களுக்கு இடையில் போதுமான பாதுகாப்பான இடைவெளியைப் பேணிக்கொள்ளவும்.
அவசர சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் வாகனங்களைச் செலுத்துமாறும் அதிகாரசபை சாரதிகளை வலியுறுத்தியுள்ளது.

