Yaden Laboratories நிறுவனம் 20 மில்லியன் ரூபா நன்கொடை
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருவதுடன், Yaden Laboratories நிறுவனத்தினால் 20 மில்லியன் ரூபா நிதி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான காசோலையை Yaden Laboratories நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சசீமால் திசாநாயக்க இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

