பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க தயாரான IMF

பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க தயாரான IMF

நாடு முழுவதும் உயிர்களைப் பலிகொண்டு, ஆயிரக்கணக்கானோரை இடம்பெயரச் செய்த அழிவுகரமான புயல் மற்றும் வெள்ள நிலைமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்பைக் குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளது. 

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே IMF இன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசேக் இதனைத் தெரிவித்தார். 

அனர்த்தத்தின் மனிதாபிமான, சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை மதிப்பிடுவதற்கு இலங்கை அதிகாரிகள், அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் ஏனைய சகாக்களுடன் நெருக்கமாக செயற்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

“புயலினால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் மனித உயிரிழப்புகளுக்கு மேலதிகமாக பொருளாதார நடவடிக்கைகளிலும் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் அங்கு குறிப்பிட்டார். 

இலங்கை தற்போது அதன் பங்காளிகளுடன் இணைந்து உடனடி அனர்த்தத்திற்குப் பிந்திய சேத மதிப்பீட்டை மேற்கொண்டு வருகிறது. 

இந்த மதிப்பீடு நிறைவடைந்த பின்னர் பொருளாதார தாக்கங்கள் குறித்த தெளிவு கிடைக்கும் என அவர் கூறுகிறார். 

எஸ். ரஜீவன்