நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு

நீர்த்தேக்கங்கள் சிலவற்றின் வான்கதவுகள் திறப்பு

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 6 அடிக்கும் மற்றும் 4 வான் கதவுகள் தலா 4 அடிக்கும்  திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாரியபொல பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் நீர்த்தேக்கத்திலிருந்து தெதுரு ஓயாவிற்கு வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார்.

அதேபோல், தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தலா 3 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாகவும், 4 வான் கதவுகள் தலா 2 அங்குலம் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீ ஓயாவிற்கு வினாடிக்கு 3,720 கன அடி நீர் வெளியேற்றப்படும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்