தோட்டத் தொழிலாளர்ளை தோட்ட முதலாளியாக்குங்கள் – சஜித்

தோட்டத் தொழிலாளர்ளை தோட்ட முதலாளியாக்குங்கள் – சஜித்

நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதால் மாத்திரமல்லாது, பெருந்தோட்டத் துறையில் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும், முற்றிலுமே பயன்படுத்தப்படாத காணிகளில் பயிரிடுவதற்கான உரிமையை வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். 

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 

இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது. 

துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். 

இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எஸ். ரஜீவன்