தாய்வானைத் தாக்கினால் பதிலடி கொடுப்போம் – ஜப்பான் எச்சரிக்கை

தாய்வானைத் தாக்கினால் பதிலடி கொடுப்போம் – ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி பதவியேற்றார். ஆசிய நாடுகள் பயணத்தின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் டோக்கியோவுக்கு வந்து சனே தகைச்சியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இருநாடுகளிடையே இராணுவ, பொருளாதார உறவுகள் குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில், டோக்கியோவில் பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய சனே தகைச்சி. அண்டை நாடான தாய்வானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக சீனா உறவு கொண்டாடி வருகிறது. மேலும் தாய்வான் மீது போர் விமானங்களைப் பறக்கவிட்டு அச்சுறுத்தி வருகிறது.தைவான்மீது சீனா தாக்குதல் நடத்தினால் ஜப்பான் ராணுவம் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். 

இது இரு நாடுகளுக்கு இடையே பெரும் விவாதப் பொருள் ஆகியுள்ளது

ஜப்பான் பிரதமரின் இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கோரி சீன அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

எஸ். ரஜீவன்