300 கிலோ போதைப்பொருள்களுடன் மாலைதீவில் இலங்கை மீன்பிடி படகு

300 கிலோ போதைப்பொருள்களுடன் மாலைதீவில் இலங்கை மீன்பிடி படகு
கோப்பப் படம்

300 கிலோ போதைப்பொருள்களுடன் மாலைதீவில் இலங்கை மீன்பிடி படகு அந்நாட்டுப் படையினரால் சுற்றிவைள்கப்பட்டுள்ளது.

சுமார் 300 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இலங்கை மீனவர்கள் அறுரையும் ஒரு மீன்பிடி படகையும் மாலைதீவு பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். 

இலங்கை கடற்படை வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த போதைப்பொருள் தெஹிபாலே மல்லி என்ற நபருக்கு சொந்தமானது என்ற தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

எஸ். ரஜீவன்