195 நாடுகளின் அமைவிடத்தைச் சொல்லி சோழன் உலக சாதனை
195 நாடுகளின் அமைவிடங்களை உலக வரைபடத்தில் குறைந்த நேரத்தில் சுட்டிக்காட்டி சோழன் உலக சாதனை படைத்துள்ளார் 2 வயது குழந்தை மிர்திக் தேவ்
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா இணையரின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ்
இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார்.
இதற்கான நிகழ்வு (16) வியாழன் அன்று ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது.
குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார்.
சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.

