இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

இந்திய மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29  இந்திய  மீனவர்களையும் எதிர்வரும் 29ஆம்  திகதி வரை விளக்கமறியலில் தொடர்ந்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 29  இந்திய மீனவர்களின் வழக்கு நேற்று (15)ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நெடுந்தீவுக் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கைக்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் கடந்த 9ஆம் திகதி நெடுந்தீவுக் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கைக்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

எஸ். ரஜீவன்