80 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியவர் கைது!

80 மில்லியன் டொலரை வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக மாற்றியவர் கைது!

80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கணக்குகளுக்கு சட்டவிரோதமாக telegraphic transfers (T/T) முறைமை மூலம் மாற்றியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

2023 – 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறு 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை வௌிநாட்டு கணக்குகளுக்கு மாற்றியுள்ளதாக கூறப்படுகின்றது.

manel