7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுப்பு!

07 மாவட்டங்களின் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

நேற்று (27) இரவு 9.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இன்று (28) பிற்பகல் 4.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, முதலாம் கட்ட அவதானமாக இருக்க வேண்டிய (மஞ்சள்) எச்சரிக்கை பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் கீழ்க்காணும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்டம் ஹல்துமுல்லை பசறை 

களுத்துறை மாவட்டம் பாலிந்தநுவர புலத்சிங்கள 

கண்டி மாவட்டம் யட்டிநுவர தும்பனை ஹதரலியத்த உடபளாத்தகங்க இஹல கோரளை உடுதும்பர தொலுவஉடுநுவர 

கேகாலை மாவட்டம் அரநாயக்க ருவன்வெல்ல தெஹியோவிட்ட மாவனெல்லை புலத்கொஹுபிட்டிய கேகாலை கலிகமுவ யட்டியாந்தோட்டை ரம்புக்கனை 

மாத்தளை மாவட்டம் ரத்தோட்டை 

நுவரெலியா மாவட்டம் கொத்மலை கிழக்குநில்தண்டாஹின்ன கொத்மலை மேற்குநோர்வூட் அம்பகமுவ கோரளை தலவாக்கலை வலப்பனை 

இரத்தினபுரி மாவட்டம் குருவிட்ட கிரியெல்ல 

குறித்த பிரதேசங்களின் மலைச்சரிவுகளை அண்டி வாழும் மக்கள் மண்சரிவு, மண்மேடு இடிந்து விழுதல், கற்கள் உருண்டு விழுதல் மற்றும் மண் திட்டுக்கள் சரிந்து விழுதல் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும், நிலவும் வானிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறும், அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய செயற்படுமாறும் பொதுமக்களுக்கு மேலதிகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

manel