500 தேயிலைக் கிராமங்களை ஸ்தாபிக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று ஆரம்பம்

500 தேயிலைக் கிராமங்களை ஸ்தாபிக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டம் இன்று ஆரம்பம்

“கொழுந்தால் செழிக்கும் நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் 500 தேயிலைக் கிராமங்களை ஸ்தாபிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் நுவரெலியா மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் இன்று (15) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள சிறுதோட்டத் தேயிலை உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, நவீன தொழில்நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தேயிலைக் கிராமியக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

தேயிலை உற்பத்திக்கு மிக உகந்த காலநிலை மற்றும் பெருமளவிலான சிறுதோட்டத் தேயிலை விவசாயிகளைக் கொண்ட ஹபுகஸ்தலாவ பிரதேசத்தை மையமாகக் கொண்டு இந்தத் தேசிய திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

உலகப் புகழ்பெற்ற “இலங்கைத் தேயிலை” வர்த்தக நாமத்தை சர்வதேச சந்தையில் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கும், கிராமியப் பொருளாதாரத்தை மறுமலர்ச்சியடையச் செய்வதற்கும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

manel