5 ஆண்டுகளில் வீதி விபத்துகளால் ஆண்டுக்கு 2,536 பேர் பலி: நாடாளுமன்றத்தில் தகவல்

5 ஆண்டுகளில் வீதி விபத்துகளால் ஆண்டுக்கு 2,536 பேர் பலி: நாடாளுமன்றத்தில் தகவல்

2021 ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான கடந்த ஐந்து ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற வீதி விபத்துகளில் ஆண்டுதோறும் சராசரியாக 2,536 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதே காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் வீதி விபத்துகளினால் சராசரியாக 32,483 பேர் காயமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், வீதி விபத்துகளில் காயமடைந்தவர்களின் பராமரிப்பிற்காக நாடு தனது ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3% முதல் 5% வரையான தொகையைச் செலவிடுகிறது என்றும் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

manel