45 வது தேசிய இளைஞர் நாடக விழா இம்முறை டவர் அரங்கில்.

45 வது தேசிய இளைஞர் நாடக விழா இம்முறை டவர் அரங்கில்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஏற்பாடு செய்து நாடாத்தப்படும் 45 வது தேசிய இளைஞர் நாடக விழா இம்முறை மரதானை டவர் அரங்கில் நடைபெற்று வருகிறது .
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி ஆரம்பமான இந்நாடகவிழாவில் 26ஆம் திகதி வரையிலும் அதனை தொடர்ந்து , நவம்பர் 2ஆம் திகதியும் நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வு ஒக்டோபர் 15ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.தேசிய இளைஞர் நாடக விழாவின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவுசெய்யப்பட்ட குறுநாடகங்கள் மற்றும் முழுநீள நாடகங்கள் இவ்விழாவில் மேடையேற்றப்படுகின்றன .
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இம்முறை நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றமை விசேட அம்சமாகும்.
13 நாட்கள் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், குறுநாடகங்கள் மற்றும் முழுநீள நாடகங்கள் என மொத்தம் 33 நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.
இவற்றில் தமிழ் மொழி மூலமாக 6 குறு நாடகங்களும் 04 நெடு நாடகங்களும் மொத்தமாக 9 தமிழ் மொழிமூல நாடகங்கள் இம்முறை மேடையேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஆங்கில மொழிமூல 4 குறு நாடகங்கங்கள் , சிங்கள மொழிமூல 5 நெடு நாடகங்கள் , 23 குறு நாடகங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 9 நெடு நாடகங்களும் 36 குறு நாடகங்களும் மேடைற்ற ற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.இம்முறை மொத்தமாக மும்மொழிகளிலும் 110 நாடக பிரதிகளில் தரமான நாடகங்களின் தெரிவு 2 ஆம் சுற்றுக்காக மாகான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதுடன் இறுதி சுற்றுக்கு நாடலாவிய ரீதியில் நாடக பன்புடன் கூடிய தரமான 45 இப்பொழுது தேசியமட்ட போட்டியில் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நாடகங்கள் அனைத்தும் தினமும் மாலை 6.00 மணிக்கு மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தல் ஆரம்பமாகும்.அத்துடன் இந்நாடக விழாவில் நடுநிலைமைக்கு உட்பட்டு வெற்றி பெறும் நாடகங்களுக்கான விருது வழங்கும் விழாநவம்பர் 18ஆம் திகதி 45 வது தேசிய இளைஞர் நாடக விருது வழங்கும் நிகழ்வு நவம்பர் 18ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரபல கலைஞர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.மேலும், நாடக விழா நிறைவடைந்த பின்னர், சிறந்த நாடகங்களை நாடளாவிய ரீதியில் மேடையேற்றுவதற்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் திட்டமிட்டுள்ளது. வெற்றிபெறும் நாடகங்களுக்கு பணப்பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் விருதுகள் வழங்கவும் ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலவசமாக நாடகங்களைப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் நாடகங்களின் மேடையேற்றம் தொடர்பான தினசரித் தகவல்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் (National Youth Services Council – NYSC) உத்தியோகபூர்வ Facebook பக்கத்தில் வெளியிடப்படும்.இந்த நாடக விழாவில் பொதுமக்கள் அனைவரும் இலவசமாகக் கலந்துகொண்டு நாடகங்களைப் பார்வையிட முடியும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது.
இம்முறை மேடையேற்ற படவிருக்கும் தமிழ் நாடகங்கள்.1.2026.10.15சபாபதி கலையரசி யின் – அடுத்து நீ 2.2026.10.17சிவநேசன் பிரசாத்தின் ஒரு கொலை 3.2026.10.18மோசஸ் சுரேஸின் குறி தவறு 2026.10.224.தியாகராஜா யுவாராஜனின் The Proposal5.ராஜேஷ் கண்ணாவின் Accidenntial Death of an Anarchist.2026.10.256.சோனியா சிவகுமாரின் இறைவன் வீணை 7.C. K. கயானின் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குரல்கள்.2026.11.028.மஞ்சுளா சுதர்ஷினியின் Last Night09.S. M. நிரஞ்சனின் செய்தி :-சுப்பையா சிவராஜா,அறிவிப்பாளர்.ஊடக பிரிவு,தேசிய இளைஞர் சேவைகள் மன்றம்.0764356543

