32 மில்லியன் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயற்சி; இருவர் கைது!

32 மில்லியன் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயற்சி; இருவர் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக சீனாவிற்கு ரூபா. 32 மில்லியன் மதிப்புள்ள இரத்தினக் கற்களை கடத்த முயன்ற நிலையில், இலங்கை விமானப் பயணிகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் குழுவினால் நேற்று (21) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பகுதியைச் சேர்ந்த, 38 மற்றும் 39 வயதுடைய இரு முஸ்லிம் இரத்தின வியாபாரிகள் என சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் சீனாவின் செங்டு நகருக்குச் செல்லும் சீனா ஏர்லைன்ஸ் விமானம் (CA-426) இல் பயணிக்க, இரவு 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்திருந்தனர்.

கைப்பற்றப்பட்ட இரத்தினக் கற்களில்,Blue Shaperar,Padmaracha,Spinel,Ruby,Crysobery,Tsavorite,Garnet,Cats Eye,Moonstone,Tourmaline,Star Shaperar, என்பன உள்ளடங்கியுள்ளன.

மொத்தமாக 756 கெரட் மதிப்புள்ள 390 முக்கிய இரத்தினக் கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தடுத்து வைத்து, இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

manel