3 மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இன்று (11) மாலை 4 மணிக்கு வௌியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, தெஹியோவிட்ட, மாவனெல்லை மற்றும் தெரணியகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரள, நீல்தன்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்.

இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, எஹலியகொட, வெலிகேபொல மற்றும் அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே இரண்டாம் நிலை மண்டசரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

manel