2027-க்குள் கொழும்பில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: அரசாங்கம் திட்டம்

2027-க்குள் கொழும்பில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள்: அரசாங்கம் திட்டம்

கொழும்பு மற்றும் ஏனைய நகர்ப்புறங்களில் நிலவும் வீடமைப்பு மற்றும் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், 2027ஆம் ஆண்டுக்குள் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, தனியார் துறையுடன் இணைந்து புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதன் ஒரு கட்டமாக, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத், கொழும்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பல காணிகளை நேற்று (20) நேரில் பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, குறித்த காணிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகள், சட்ட மற்றும் தொழில்நுட்பச் சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், தெமட்டகொடை ஆராமய வீதியிலுள்ள ஜனசெவன வீடமைப்புத் தொகுதியில் குடியிருப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

manel