2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று
2025/2026 பருவகாலம் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (31) நடைபெறுகிறது.
நல்லதண்ணி நகரில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் கேட்போர் கூடத்தில் சிவனடிபாத மலைக்குப் பொறுப்பான விகாராதிபதி பெங்கமுவே தம்மதின்ன தலைமையில் கலந்துரையாடல் நடைபெறுகிறது.
நுவரெலியா மாவட்ட அரச அதிபர், நோர்வூட் பிரதேச செயலாளர் சுகாதார வைத்திய அதிகாரி பொது சுகாதார அதிகாரிகள் ஹட்டன் அரச பேருந்து நிலைய அதிகாரிகள் தனியார் பேருந்து நிலைய அதிகாரிகள் ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரிகள் மின்சார சபை அதிகாரிகள் தேசிய நீர் வழங்கல் துறை அறிவிப்புகள் வன துறை அறிவிப்புகள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கினிக்கத்தேன வட்டவளை நோட்டன் பிரிட்ஜ் ஹட்டன் நோர்வூட் பொகவந்தலாவ மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நுவரெலியா மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள், வர்த்தகர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்கள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.
இம் முறை சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்கள் எவ்வாறு வர வேண்டும் என்பது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்று பல தீர்மானங்கள் எடுக்க பட உள்ளன.

