புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 600 மில்லியன் நவீன உபகரணங்கள்

புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு ரூபா 600 மில்லியன் நவீன உபகரணங்கள்

புதிய தெனியாய வைத்தியசாலைக்கு ரூ. 600 மில்லியன் மதிப்பிலான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

திட்வா புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் புவியியல் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, தெனியாய அடிப்படைவைத்தியசாலையைப் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யும் திட்டத்திற்காக, சுமார் ரூ. 60 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (13) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டொக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா ஆகியோர் இதில் கையொப்பமிட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் டிட்வா சூறாவளி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், புதிய தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கும், இது தெனியாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களுக்கு பாதுகாப்பான, மற்றும் திறமையான சுகாதார சேவையை வழங்கும் திறனை வலுப்படுத்தும்.

manel