ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஜனவரி 25க்கு ஒத்திவைப்பு!

ஹிருணிகா மீதான வழக்கு விசாரணை ஜனவரி 25க்கு ஒத்திவைப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான வழக்கு இன்று (02) கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வழக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து வீதி நாடகம் நடத்திய சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

manel