ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை 

ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் தெரிவிப்பு 

மலையகத்தில் தொடரும் சிரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (25) நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் தெரிவித்தார்.

மலையகத்தில் தொடரும் கடும் காற்று மற்றும் மழை காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளின் அதிபருக்கு அதற்கான அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்றைய தினம் காலையில் இருந்து தொடரும் சீரற்ற காலை காரணமாக நாளைய தினம் ஹட்டன் கல்வி வலையத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளர் எஸ்.ஜெயகுமார் மேலும் தெரிவித்தார்.

manel