வீடமைப்புத் திட்டப் பணிகள் துரிதம்
பூநாகல, கபரகலயில் அமைந்துள்ள மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புப் பணிகளை கண்காணிக்கும் விஜயமொன்றை பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அண்மையில் கபரகல பிரதேசத்தில் மேற்கொண்டார்.
இச்சுற்றுப்பயணத்தில் மாவட்ட செயலாளர் சஜித நாமல் ஹேரத், பயிற்சி நிருவாக சேவை உத்தியோகத்தர் குழுவின் (2025) உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

