வட்டகொடை யோர்க்‌ஸ்போட் மக்களை வெளியேறுமாறு நிர்வாகம் நிர்ப்பந்தம்

வட்டகொடை யோர்க்‌ஸ்போட் மக்களை வெளியேறுமாறு நிர்வாகம் நிர்ப்பந்தம்

தலாவாக்கலை வட்டகொட யோக்ஸ்போட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக தற்காலி முகாம்களில் உள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை வட்டகொட யோக்ஸ்போட் தோட்டத்தில் நிலம் தாழ் இறங்கியதோடு குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் காணப்பட்டதன் காரணமாக கடந்த 27ஆம் திகதி 45குடும்பங்களை சேர்ந்த 102 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தோட்ட சிறுவர் பாராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தற்பொழுது குறித்த தோட்டத்தில் 16குடியிருப்புகளை கொண்ட தொடர் லயன் குடியிருப்பில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு அந்த குடியிருப்புகள் நாளுக்கு நாள் தாழ்ழிறங்கி வருவதாகவும் அங்கு சென்று அந்த குடியிருப்புகளுக்கு சென்று மீண்டும் அம்மக்களை செல்லுமாறு தோட்ட நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருகிறது

ஆனால் பாதிப்படைந்த குடியிருப்புகளில் போய் எப்படி நாம் வாழ்வது என அத்தோட்ட மக்கள் கேட்கன்றனர்.

இதேவேளை அந்த தோட்டத்தில் 31 வீடுகள் அமைந்துள்ள வீடுகளுக்கு மாத்திரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் வருகை தந்து பரீசோதனை மேற்கொண்டதோடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 16குடியிருப்புக்களை கொண்ட தொடர் லயன் குடியிருப்புக்கு தேசிய கட்டி ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் எவ்வித பரீசோதனைகளையு முன்னெடுக்க வில்லையென மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கதிரவன்

எஸ். ரஜீவன்