“வடக்கு தென்ன முக்கோண வலயத்தின் ” அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பில்!

“வடக்கு தென்ன முக்கோண  வலயத்தின் ” அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி தலைமையில்  புதுக்குடியிருப்பில்!

இன்று சர்வதேச தெங்கு தினம்(02 செப்டம்பர்) வடக்கு மண்ணை பசுமையாக்கும் “வடக்கு தென்ன முக்கோண வலயத்தின் ” அங்குரார்ப்பண விழா ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பில்

வடக்கு மற்றும் தெற்கு மக்களின் மனங்களை ஒன்றிணைக்கவும் நாட்டின் பொருளாதாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்று செழிப்பான தென்னை அறுவடையை விருத்தி செய்து அன்னிய செலாவணியை அதிகரிக்கவும் இலங்கை தேசத்தை சுபிட்சமானதாக்க பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கற்பகதரு வளம் நாடே சுபிட்சம் ஆகும் விருட்சம்” என்ற தொலைநோக்கு தொனிப் பொருளின் கீழ் பருத்தி துறை, சிலாவத்துறை மற்றும் கொக்கிளாய் ஆகிய மூன்று நகரங்களையும் இணைத்து ஆரம்பிக்கப்படும் வடக்கு தென்னை முக்கோண வளையமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மற்றும் வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படுகின்றது.

இவ்வேளை திட்டமானது செப்டெம்பர் 02ம் திகதி இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் இடம் பெற உள்ளது.

இதன் மூலம் நாட்டின் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் சம்பிரதாயபூர்வமான தென்னை முக்கோண வளையமான கம்பஹா, குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கி தென்னை அபிவிருத்தியை விருத்தி செய்ய இவ் வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் 500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் வடக்கின் இவ் வருடத்திற்குள் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தியை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 30 வருட கால யுத்தத்திற்கு பிறகு விவசாயத் துறையின் அபிவிருத்தி மிகக் குறைந்தே காணப்பட்டது வடக்கை பொறுத்தவரையில் அதிகமான விவசாய நிலங்கள் தென்னை உற்பத்திக்கு ஏற்ற காலநிலையும் வடக்கு விவசாயிகளின் ஆர்வமும் மிக அதிகமாக காணப்படுகின்றபடியினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வடக்கு தென்னை முக்கோண வளையத்தினை அபிவிருத்தி செய்து உற்பத்தியை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு 16,000 ம் ஏக்கரிலும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 16 ஆயிரம் ஏக்கரிலும், 2027 ஆம் ஆண்டு 8000ம் ஏக்கரிலும் வடக்கின் தற்போதைய உற்பத்தி நிலத்தையும் உள்ளடக்கி மொத்தமாக 50ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தியை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதோடு தென்னை உற்பத்தியினை மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன் கருதி அரசாங்கத்தினால் பல்வேறு சலுகைகள், மற்றும் மானியங்களையும் வழங்கவும் தீர்மானித்துள்ளதுதெங்கு உற்பத்தியினைமேற்கொள்ளும் சிறிய அளவிலான விவசாயிகள் முதற்கொண்டு 50 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பாரிய அளவில் தென்னை உற்பத்தியினை மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன் கருதி தேவையான தென்னங்கன்றுகள், பசலைகள் நிலப்பரப்பின் ஈரளிப்பு தன்மையை பேணிப் பாதுகாத்துக் கொள்ளவதற்கு சொட்டுநீர் பாய்ச்சும் மற்றும் நீர்பாசன திட்டங்களுக்காக அரசாங்கத்தினால் 30 ஆயிரம் ரூபாய் நன்கொடைகளையும் வழங்க உள்ளதோடு .

தெற்கிலே அதிகளவான தெங்கு விதை நாற்றங்கால் காணப்படுகின்ற போதிலும் வடக்கு மாகாணத்தின் முதல் தெங்கு விதை நாற்றங்கால்இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இவ் தென்னை விதை நாற்றங்காலினை கௌரவ ஜனாதிபதியின் தலைமையில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இவ்வாறு வடக்கின் தென்னை உற்பத்தியினை அபிவிருத்தி செய்யப்படுவதோடு தெற்கிலும் 2025 ஆம் ஆண்டிற்குள் 20,ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில் உற்பத்தியை மேற்கொள்ளப்படுவிருக்கின்றது.கடந்த காலங்களில் வருடத்திற்கு ஏழு மில்லியன் (ஏழு லட்சம்) தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய ப்பட்டிருந்தாலும் கூட தொலைநோக்கு சிந்தனையின்மை முறையான பராமரிப்பின்மை பகிர்ந்து அளிக்கப்பட்ட வேலைகளை பாராபட்சங்கள், விவசாயிகளுக்கான ஆலோசனைகள் , மானியங்கள், சலுகைகள் இன்மை போன்ற பல்வேறு காரணிகள் அப்போதைய அரசாங்கத்தின் செயற் திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவே காணப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து வருடம் கால தொலைநோக்கு சிந்தனையோடு இவ் செயற் திட்டத்தினை முன்னெடுத்து சிறந்த பயனை பெற்றுக் கொள்வதற்கான நடைமுறை சாத்தியமான விடயங்களை மாத்திரம்இலக்காக கொண்டு செயற்படுத்தப் பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது .2025 ஆம் ஆண்டுஇந்த முதல் ஏழு மாத காலப்பகுதிக்குள்தெங்கு மற்றும் இதர உற்பத்திகள் மூலம் 660 மில்லியன் அமெரிக்கா டொலரினை வருவாயாக பெற்றுள்ளதோடுஇது 20204-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஒப்பிட்டு பார்க்கும் போது 63% மான வளர்ச்சியினை கண்டுள்ளதோடு, இதனை மேலும் இரட்டிப்பாக்கி கொளாவதற்கும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் தேங்காய் உற்பத்யினை அதிகரிக்கவும் ஏற்றுமதியின் மூலம் அதிக லாபத்தை ஈட்டிக் கொள்வதினை பிரதான நோக்காக கொண்டு பெருந்தோட்ட அமைச்சும் யுனிடோ நிறுவனமும் இணைந்து 4, 200 மில்லியன் தேங்காய்களின் உற்பத்திகளை அதிகரிக்கும் முகமாகவே இன்றைய தினம் புதுக் குடியிருபாபு பிரதேசத்தில் 16 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்தியினை மேற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு தெங்கு விவசாய உற்பத்திகளுக்கான உறுதி பத்திரங்களையும் தெங்கு உற்பத்தியாளர்களுக்கான பல்வேறு சலுகைகளையும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

manel