லொறிமீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சாரதி படுகாயம்

லொறிமீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சாரதி படுகாயம்

லொறிமீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.

பலாங்கொடை ராசகல ஊடாக இரத்தினபுரி செல்லும் வீதியில்.
ராசகல பகுதியில் தேயிலை ஏற்றிச் சென்ற பாரவூதி மீது இன்று காலை பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பாரவூர்தி சாரதி பாரிய காயங்களுடன் பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மரம் முறிந்து விழுந்ததில் பாரவூர்தியின் முன் பகுதி பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக இந்த வீதியில் போக்குவரத்து ஐந்து மணி நேரம் முற்றாக தடைப்பட்டது.

கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக இந்த மரம் முறிந்து விழுந்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் பிரதேச மக்கள் ஒன்றினைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதற்கு பின்பு அந்த வீதியில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது..

எஸ். ரஜீவன்