லசந்த கொலை தொடர்பில் கைதான மேலும் மூவருக்கு விளக்க மறியல்

லசந்த கொலை தொடர்பில் கைதான மேலும் மூவருக்கு விளக்க மறியல்

லசந்த கொலை தொடர்பில் கைதான மேலும் மூவருக்கு விளக்க மறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று (28) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிதாரிக்கு மோட்டார் சைக்கிளை வழங்கியவர், அந்த மோட்டார் சைக்கிளை பழுது பார்த்தவர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி ஆகிய மூவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எஸ். ரஜீவன்