ரஷ்யாவைத் தடுத்துநிறுத்தவில்லை எனில் கட்டுக்கடங்காமல் போய்விடும்

ரஷ்யாவைத் தடுத்துநிறுத்தவில்லை எனில் கட்டுக்கடங்காமல் போய்விடும்

ரஷ்யாவைத் தடுத்துநிறுத்தவில்லை எனில் கட்டுக்கடங்காமல் போய்விடும் என்று உக்ரேனிய ஜனாதிபதி வொலடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ர‌‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைத் தடுத்துநிறுத்தவில்லை என்றால் அவர் போரைத் தொடர்ந்து விரிவுபடுத்திக்கொண்டே போவார் என உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.

நட்பு நாடுகள் ஒன்றுபட்டு வலுவான முடிவை எடுக்காவிட்டால் மேலும் பல நாடுகள் ர‌‌ஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார் அவர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் திரு ஸெலென்ஸ்கி பேசினார்.

உலகளாவிய ஆயுதப் போட்டாப்போட்டியால் அனைத்து நாடுகளும் அச்சுறுத்தலுக்கு இலக்காவதாக அவர் சொன்னார்.

ராணுவத் தொழில்நுட்பம் நவீனமாகிவரும் சூழலில், எந்த நாடு பிழைத்துநிற்கும் என்பதை முடிவுசெய்யப்போவது ஆயுதங்களே என்றார் உக்ரேனிய அதிபர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலக அளவில் விதிமுறைகள் வகுக்குப்படுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

பாரம்பரியப் போர்முறையைக் காட்டிலும் தானியங்கி வானூர்திகளையும் விமானங்களையும் உருவாக்குவது மேலும் கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கக்கூடும் என்றார் திரு ஸெலென்ஸ்கி.

ர‌‌ஷ்ய-உக்ரேனியப் போர் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ள வேளையில் திரு ஸெலென்ஸ்கியின் கருத்துகள் வந்துள்ளன. இழந்த அனைத்துப் பகுதிகளையும் உக்ரேனால் மீட்டுவிடமுடியும் என்று திரு டிரம்ப் முதன்முறையாக நம்பிக்கை தெரிவித்தார்.

ர‌‌ஷ்யாவின் ஆதிக்கத்துக்கு மோல்டோவா அடிபணியாமல் ஐரோப்பா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உக்ரேனியத் தலைவர் எச்சரித்தார். மோல்டோவா உக்ரேனுக்கும் ருமேனியாவுக்கும் இடையில் உள்ளது. புட்டினின் பார்வையிலிருந்து ஜார்ஜியாவையும் பெலருஸையும் பாதுகாக்கின்ற வாய்ப்பை ஐரோப்பா இழந்துவிட்டதாகத் திரு ஸெலென்ஸ்கி சொன்னார்.

எஸ். ரஜீவன்