யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலை

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய புத்தர் சிலை

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று (17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. 

கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாகக் கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சிப் பகுதிகளில் கரையொதுங்கியுள்ளன. 

அதேபோல், சேதமடைந்த இந்தச் சிலை கடலில் போடப்பட்ட நிலையில், அது வளலாய் பகுதியில் கரையொதுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

எஸ். ரஜீவன்