முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவருக்கும் மாவட்ட செயலாளருக்கும் இடையே மோதல்!

முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத் தலைவருக்கும் மாவட்ட செயலாளருக்கும் இடையே மோதல்!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வரும் “டெங்கற்ற கிழக்கு” வேலைத்திட்டத்தின் கீழ், அட்டாளச்சேனை பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்த விசேட முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் (22) மாலை 5.00 மணியளவில் அட்டாளச்சேனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொருளாளர் றஹ்மத் மன்சூர், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எம்.எம்.முஷாரப், அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளச்சேனை மத்திய குழுத் தலைவர் எதிர்பாராதவிதமாக கூட்ட மண்டபத்திற்கு வருகை தந்து, கட்சி சார்ந்த முக்கிய நிகழ்வுக்கு, மத்திய குழுத் தலைவரான எனக்கு உத்தியோகபூர்வமாக ஏன் அழைப்பு விடுக்கப்படவில்லை எனக்கூறி, கட்சியின் அம்பாறை மாவட்டச் செயலாளர் ஏ.சி.சமால்தீனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றி, தகாத வார்த்தைப் பிரயோகங்களுடன் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்படும் நிலைக்கு நிலைமை தீவிரமடைந்தது. இதனால் கூட்ட மண்டபத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவி ஒரு சுமுகமற்றதாக மாறியதையடுத்து, அங்கிருந்த கட்சியின் முக்கியஸ்தர்களும், உறுப்பினர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கூட்டத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் உட்கட்சி முரண்பாடுகள் குறித்து அம்பாறை மாவட்டச் செயலாளர், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் கவனத்திற்கு தொலைபேசி ஊடாகத் தெரியப்படுத்தினார்.

manel