முஸ்தபிசுர் ரஹ்மான் IPL தொடரிலிருந்து நீக்கம்

முஸ்தபிசுர் ரஹ்மான் IPL தொடரிலிருந்து நீக்கம்

எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிப்பதாக அறிவித்துள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முஷ்தபிசுர் ரஹ்மான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு இந்து அமைப்புகள் பங்களாதேஷ் வீரர் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடக்கூடாது என தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில், முஸ்தபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கோரிக்கை விடுத்துள்ளது.குறித்த கோரிக்கைக்கு இணங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவித்துள்ளது.

manel