முள்ளோயா நபர் ஹேவாஹெட்ட நகர நீரோடையில் வீழ்ந்து மரணம்

முள்ளோயா நபர் ஹேவாஹெட்ட நகர நீரோடையில் வீழ்ந்து மரணம்

நுவரெலியா ஹங்குராங்கெத்த முள்ளோயா தோட்டத்தைச் சேர்ந்த நபர் ஹேவாஹெட்ட நகருக்குச் சென்றிருந்தபோது நகரின் நீரோடைக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு எட்டு மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான பெருமாள் கனகலிங்கம் என்ற 52 வயது நபரே உயிரிழந்தார்.

ஹேவாஹெட்ட நகரத்துக்குச் சென்று வருகையில் கடுமையான மழை காரணத்தினால் வீதி ஓரத்தில் நீரோடைக்குள் விழுந்து அவர் உயிரிழந்தார்.

வீதி ஓரத்தில் இருக்க வேண்டிய பாதுகாப்பு வேலி இல்லாமயே கானில் வீழ்ந்து அற்த நபர் உயிரிந;தள்ளதாகத் தெரியவ ருகிறது.

ஏற்கனவே வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டும் அந்த இடத்திற்கான பாதுகாப்பு வேலி ஒன்றினை நிறுவவில்லை. ஒரு வழி ப்பாதை மாத்திரம் இருக்கும் இந்த இடத்தில் இருந்து அந்த நீரோடைக்கு ஒரு அடி தூரமே உள்ளது.

அதற்குப் பாதுகாப்பு வேலி கட்டாயமாக இடப்பட வேண்டும். எதிர்வரும் காலத்தில் இப்படியான மரணங்களைத் தவிர்க்க சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ். ரஜீவன்