முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

முதியவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று வங்கி கணக்குகளில்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கான ஜூன் மாதக் கொடுப்பனவுகள் இன்று ( 03)பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதிபெற்ற பயனாளிகளுக்கே இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, முதலாம் கட்டத்தில் 621,761 முதியவர்களுக்காக சுமார் 3.5 பில்லியன் ரூபாய் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் 76,139 சிரேஷ்ட பிரஜைகளுக்காக சுமார் 380 மில்லியன் ரூபாய் கணக்குகளில் இடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தகுதியுடைய பயனாளிகள் அனைவரும் தமக்குரிய கொடுப்பனவுகளை இன்றைய தினம் முதல் தங்களது வங்கி கணக்குகளில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

manel